Thursday, 3 January 2013

ஜோதிடம் ஜாதகம் சிறு விளக்கம் (பகுதி 2)

  
     சென்றமுறை புதிதாகத் துடங்கிய கட்டுரைஇது. எனவே, படிக்காதவர் களுக்காவும் தொடர்ச்சிக்காகவும் மீண்டும் ஒருசில வரிகளில் சென்ற இதழின் தொகுப்பபார்க்கலாம். ஜோதிடம் பற்றிய தவறான வழிமுறைகளால் மக்கள்பாதிப்படயாதிருக்க இக்கட்டுரையை தொடங்குகிறோம். ஜோதிடம் என்றால் இயற்க்கை.இதை மாற்றமுடியாது.மாற்றங்களும் அதனுள்ளேயே முதலிலேயே வரையருக்கப்பட்டுள்ளது. சத்தியவானின் சாவித்திரி, சூரியனை நிற்க்கச்செய்ததாக கதைஉண்டு.ஆனால், தானேகடவுள் என்று உணர்த்திய பின்பும்,அர்ஜுனனைக் காப்பாற்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சூரியனை தன் சுதர்ஷன சக்கரத்தால் மறைத்தாரே தவிர நிறுத்தவில்லை!
     ஜோதிட சாஸ்திரமும் கடவுளால் இதே நிலையில்தான் உருவாக்கப் பட்டு,தேவைப்படின் மாற்றங்களும் முன்னரே முறைப்படி சாஸ்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளது! நம்வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி அமைத்திட கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பே ஜோதிடம்.

   ஜோசியம் என்பது பலன் சொல்லும் சாஸ்திர வடிவம். இந்த பலன்களை அறிந்துகொள்ள பலமுறைகள் உள்ளன. அவற்றில் தலைசிறந்ததும் அதிகம் துல்லியமானது ஜோதிடம் வாயிலாக பலன்களைக் கணித்து சொல்வதேயாகும்.ஜாதகம் என்பது வானியலின் துணைகொண்டு உருவாக்கப்பட்டது.வானியல் என்பது நாம்வாழும் பூமியுடன் சேர்த்து அண்டத்திலுள்ள கிரகங்களின் சலனங்களையும் கொண்டு ஒருதெளிவான கணிதத்தின் மூலம் உருவாக்கப்பட்டதே. சூரியனை மையமாகக்கொண்டு,கோள்களின் இயக்கங்களைவைத்தது வானியல் உருவாக்கப்பட்டது.இந்த வானியலே இயற்க்கை! இயற்க்கை நமது வாழ்க்கையை எப்படி பதிக்கிறது?

     சூரியனின் அனலும், சந்திரனின் குளிர்ச்சியும், புயலின் பாதிப்பும் நாம் நேரடியாக அனுபவித்தவை. நம் வாழ்வின் சோதனையும், சாதனையும் கூட மற்ற கிரகங்களின் சலனங்களால் நடப்பவையே.

     இயற்கையை கடவுள் மாற்றுவதில்லை, ஜோதிடம் இயற்க்கை என்றால், ஜோதிடத்தை அறிந்துகொல்வதாலோ, பரிகாரங்களைச் செய்வதாலோ நம் வாழ்க்கை எப்படிச் சிறப்பானதாகும்?

     நம்மால் இயற்கையின் இடர்பாடுகளை மாற்ற முடியாவிட்டாலும், அதன் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, பல வழிமுறைகளைக் கடைபிடிக்கிறோம்! அதேபோல, மற்ற கிரகங்களின் பாதிப்பிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள பரிகாரங்கள் உதவுகின்றன.

     கடவுள் நம்மைப் படிக்கும்போதே, நமது வாழ்வின் நன்மைகளையும், சோதனைகளையும் தெளிவாக முடிவு செய்தே அனுப்புகிறார். இதில் கடவுள் அமைக்கும் திருப்பங்களை உணர்ந்தவர்கள் முன்னேறிவிடுகிறார்கள். மற்றவர்கள் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

     கிராமங்களில் மேய்ச்சலுக்காக மாடுகளை அப்படியே புல்வெளிகளில் விட்டுவிடு பவர்களும் உண்டு. மேய்ச்சலுக்கு கயிற்றால் கட்டிவிடுபவர்களும் உண்டு . அப்படிக் கட்டி வைக்கும் கயிற்றின் அளவு சுற்றி வரும்போது, அதில் பாதியளவுகூட அந்த மாட்டினால் உண்ணமுடியாது. ஒரு சாதாரண மனிதன் சிந்தித்து அந்த அளவுக்கு அதிகமான வாய்ப்பைத் தன் மாட்டிர்க்கே கொடுக்கிறான் என்றால், நம்மைப் படைத்து காக்கும் கடவுள் நமக்கு வேண்டிய அளவைவிட அதிகமாகக் கொடுக்காமல், குறைவாகக் கொடுக்கிறான் என்று எண்ணலாமா?

     அதிக அளவு கயிற்றை கட்டி இருந்தாலும், இடையிலிருக்கும் முட்புதர்களில் கயறு மாட்டிக்கொள்ளும்போது, மாட்டின் மேய்ச்சல் அளவும் குறைந்தும்விடுகிறது. நம் வாழ்வில் ஏற்ப்படும் தடைகளை அவிழ்த்துவிட, ஆறாம் அறிவை கடவுள் நமக்குக் கொடுத்துள்ளான். சிந்தித்துச் செயல்படாதவன் வாழ்க்கைதான் அலையில் அகப்பட்ட சிறு துரும்பாய் அலைக்கழிக்கப்படுகிறது.

     சிந்தித்துச் செயல்படுவது என்றால் என்ன? நாம் என்னதான் சிந்தித்துச் செயல்பட்டாலும், விதி வலியது என்கிறார்களே என்ற கேள்வி எழும். சிந்திப்பது என்பதே, நமக்கு இடப்பட்ட விதியை அறிந்துகொள்வதே ஆகும்.

     கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை முறையைக் கொடுப்பதில்லை. சிலருக்குப் பணம், சிலருக்குக் கல்வி மற்றும் சிலருக்கு நல்ல திறமை. இப்படி பலவகை வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளான். சோதனை என்று பார்த்தாலும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான சோதனைகள். ஆனால், நம்முடைய வாழ்க்கை முறை என்ன? நம் சொதநிகளை எப்படி எதிர்கொள்வது என்பதைச் சிந்திக்காமல், நான் அம்பானியாவேன் என்று கங்கணம் கட்டினால் எப்படி?

     மேலும், கடவுளின் திருவிளையாடலுக்கு அளவே கிடையாது. நம் திறமையை நாம் பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தாலும், எத்தனைபேருக்கு அவர்கள் திறமை பலனளித்திருக்கிறது என்று கணக்கிட்டால், மிகக்குறைவே! இதற்க்கு மாற்று வழியும், திறமை முன்னேறாமல்போன தற்கால இளைஞனின் சிறு கதையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

சந்தேகங்களும், மாற்றுக் கருத்தும் இருப்பின் வரவேற்க்கப்படுகிறது.

ஜோதிட ஆலோசகர் ,
பஞ்சாங்க கைப்பிரதி ஆசிரியர் 
எம்.எஸ். கோபால் 
9840684248, 9841458206  
msgopal22@gmail.com
சுபம்




     

No comments:

Post a Comment